Friday, April 29, 2016

“பிராம-ணன் தியாகம்!’’ ‘‘சூத்திரன் தியாகம்’’

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் இந்நாள் (1936).


சுதந்திரப் போராட்டம் என்று கூறப்படுகிறதே, அதில் வ.உ. சிதம்பரனார் செய்த தியாகத்திற்கான தராசு தட்டின் எதிர்த்தட்டில் நிறுத்தி வைக்க இன்னொ-ரு-வர் இந்தியாவில் பிறந்த-தில்லை.

ஆனாலும், வ.உ.சி. சூத்திரர்தானே _ அதனாலே அவரது தியாகம்கூட மலிவு சரக்காகிவிட்டது.

‘வெள்ளையனே வெளி-யேறு!’ என்ற தீரக் குரல் வெடித்துக் கிளம்பிய நேரத்தில், கட்சியை விட்டே வெளியேறியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், அவ-ருக்குத்தான் “வெற்றி-லைப் பாக்கு’’ வைத்து அழைத்து முதல் இந்தியன் கவர்னர் ஜென-ரல் என்ற மகுடம் சூட்டப்-பட்டது; என்ன செய்வது, காந்-தியா-ரின் சம்பந்தியாகவும் ஆகி-விட்டாரே!
இன்னொரு குறிப்பு “குங்குமம்’’ இதழ் பக்கம் 17 இல் (7.4.2000) வெளியானது.

1973_74 ஆம் ஆண்-டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்பு-களைக் கண்ணுறும் வாய்ப்-புள்ள ஒருவர் கூறியது:

“ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்-காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜ்-பவனத்தின் மதிப்பைவிடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே, அரசே கிண்டி ராஜ்-பவன் நிலம் முழுதும் தனக்-குக் கொடுத்துவிடவேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிரா-கரித்துவிட்டது’’ என்பதுதான் குங்குமம் வெளியிட்டிருந்த அந்தத் தகவல்!

ஆச்சாரியாரின் தியாகத்-தையும், சுதந்திரப் போராட்-டத்-துக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சி. தமிழரின் தியாகத்-தையும் “மனச்சான்று’’ உள்ளபடியே உள்ளவர்கள் எடை போட்டுப் பார்க்கட்டும்!

தியாகத்தில்கூட “பிராம-ணன் தியாகம்!’’ ‘‘சூத்திரன் தியாகம்’’ என்கிற இரட்டை அளவுகோல் இருப்பதை எண்ணும்போது இதயத்தில் திடீர் தீ பிடித்தது போலவே தகிக்கிறது.

வ.உ.சி. அவர்கள், தந்தை பெரியார் அவர்களி-டத்திலும், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சிகளின் நடவடிக்கைகளிலும் மிகுந்த மதிப்பும், ஈடுபாடும் கொண்ட மாந்தராகத் திகழ்ந்தார்கள்; பல நிகழ்ச்சிகளிலும் கலந்து-கொண்டு மடைதிறந்த தன் எண்ண நீரோட்டத்தையும் வெளிப்படுத்தியதுண்டு.

“நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர்களின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. உதாரணமாக முன்பெல்லாம் “இந்து’’ பத்திரிகை அலு-வலகத்திற்குச் சென்றபோது, திரு. கஸ்தூரி ரெங்க அய்-யங்கார் “வாடா சிதம்பரம்!’’ என்றழைத்துப் பேசுவார். ஆனால், நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒரு நாள் போனேன். “வாங்கோ சிதம்பரம்பிள்ளை, சவுக்கியமா?’’ என்றழைத்தார் என்கிறார் வ.உ.சி.

வ.உ.சி. நினைவு நாளில் இந்த வரலாற்றுக் குறிப்பு-களை அசை போடுவோமாக!

நன்றி விடுதலை 18.11.09 

பூணூல்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் சங்கர நாராயணப் பெருமாளுக்கு ஜெயேந்திரர் 3 அடி நீளமுள்ள 288 கிராம் எடையில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப் பூணூல் அணிவித்தாராம்.

இது இப்பொழுது மட்-டுமல்ல, திருப்பதி ஏழு-மலை-யானுக்கே 3 கிலோ தங்-கத்தில் பூணூல் அணி-வித்தார் (5.4.2002).

கடவுளுக்கே பூணூலா? ஆச்சரியமாக இருக்கிறதா!

இதன் பொருள் என்ன? பக்தியுள்ளவர்கள் கூட கொஞ்சம் புத்தியைச் செலுத்தினால் மிகமிக எளி-தில் புரிந்துகொள்ளலாம்.

கடவுளும், பார்ப்பனர்-களும் ஒரே ஜாதி; இன்-னும் சொல்லப்போனால், கடவுளுக்கும்மேலே பிராமணர்கள் என்பது-தான் அவர்களின் நினைப்-பும், ஏற்பாடுகளும் ஆகும்.

தமிழ்நாடு பார்ப்பனர்-கள் சங்கம் வெளியிட்ட அந்தணர் ஆற்றிய அருந்தொண்டு என்னும் நூலினை வெளியிட்ட ஜெயேந்திர சரஸ்வதி கடவுளுக்கும்மேலே பிரா-மணர்கள் என்று சொன்-னதை நினைவு கூர்ந்தால் இதன் உண்மை புரியும்.

இவர் மட்டுமல்ல, அவர்களின் வேதங்களும் அதனைத்தான் குறிப்பிடு-கின்றன.

தேவாதீனம் ஜெகத்-சர்வம்

மந்த்ரா தீனம் ததேவதா

தன் மந்த்ரம் பிரம்மாதீனம்

பிராமண மம தேவதா

(ரிக், 62 ஆவது பிரிவு 10 ஆம் சுலோகம்)

இதன் பொருள்:

உலகம் தேவர்-களுக்-குக் கட்டுப்பட்டது; தேவர்-கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்-திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்-களே நமக்குக் கடவுள் ஆவர்.

இந்து மதத்தைப் பொருத்தவரை எல்லா ஏற்பாடுகளுமே பார்ப்-பனர்களை முதன்மைப்-படுத்துவதேயாகும்.

பூணூல் அணிவது அவர்கள் இரு பிறவியா-ளர்கள் என்பதற்கு அடை-யாளம். பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று பறைசாற்றுவதாகும்.

சூத்திரர்கள் பூணூல் அணிவது மனுதர்மப்படி தடை செய்யப்பட்ட ஒன்-றாகும்.

சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை _ பூணூல் முதலியதைத் தரித்தால், அரசன் சூத்திரனின் அங்-கங்களை வெட்டவேண்-டும் (மனுதர்மம் அத்தி-யாயம் 9; சுலோகம் 224).

கடவுளுக்கும் பூணூல் போடுவதன் தாத்பர்யம் இப்பொழுது விளங்-குகிறதா?

- மயிலாடன்

விடுதலை 30.10.2009 

Wednesday, April 27, 2016

சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள்.

சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள். சீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டாளா? சீதையின் பஜாரித்தனம்! சீதை தன் கணவனைப் பேடி, மனைவியைக் கூட்டிக் கொடுக்கும் கூத்தாடி என்று பேசுதல்! சீதை ஆத்திரமடைந்து ஒரு அளவுக்கு தந்திரமாக தனது கற்புத் தவறை ஒப்புக்கொள்கிறாள்! 


சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா?
ஒரு நெருக்கடியான ஆராய்ச்சி.

சீதை எப்படிப் பிறந்தாள் என்பதற்கு ஆதாரமே காணோம். ஆனாலும் சீதையைப்பற்றிய முன் ஜன்மக் கதை ஒன்று கூர்ம புராணத்தில் உள்ளது. அது என்னவென்றால் சீதையானவள் குசத்துவசன் என்பவனுடைய வாயில் தோன்றினாளாம். தம்பன் என்னும் அரக்கன் சீதையை இச்சித்து கேட்க குசத்துவசன் மறுக்க குசத்துவசனை அந்த அரக்கன் கொன்று விட்டானாம். பிறகு சீதை விஷ்ணுவை மணக்க ஆசைப்பட்டுத் தவம் செய்கையில் அவ்வழி வந்த ராவணன் சீதையைக் கண்டு பலாத்காரம் செய்து விட்டானாம். பிறகு சீதை ராவணன் தொட்டுவிட்டதால் அந்த தோஷம் நீங்க நெருப்பில் இறங்கிவிட்டாளாம். நெருப்பில் இறங்கும் போது அடுத்த ஜன்மத்தில் லங்கையில் பிறந்து ராவணனை அழித்து விடுவதாகச் சபதம் கூறி இறந்தாளாம். 

அந்தப்படியே சீதை லங்கையில் ஒரு தாமரைப் பொய்கையில் கிடந்தாளாம். (எப்படி வந்து கிடந்தாளோ தெரியாது) அப்போது ராவணன் கண்டு எடுத்துப் போய் தன் வீட்டில் மகள் போல் வளர்த்தானாம். ஜோசியர்கள் இச்சீதை லங்கையில் இருந்தால் லங்கைக்கு ஆபத்து என்றார்களாம். அதை நம்பி ராவணன் சீதையை ஒரு பெட்டியில் இட்டுக் கடலில் விட்டு விட்டானாம். அது கரைக்கு வந்து பூமியில் புதைபட்டு விட்டதாம். பிறகு அது ஜனகன் கைக்குக் கிடைத்து அவன் எடுத்து வளர்த்து ராமனுக்குக் கட்டிக் கொடுத்தானாம். (சீதை போல இந்தக்காலத்தில் ஒரு குழந்தை கிடைத்தால் அதைப் பற்றிப் பொது ஜனங்கள் என்ன சொல்லுவார்கள்? என்பது ஒரு பக்க மிருக்கட்டும்.) 

எல்லாவற்றையும் சைன்சுக்கு (விஞ்ஞானத்துக்கு) விரோதமாகவே "தெய்வீக"மாக வைத்துப்பார்ப்போம். ராமாயணக் காவியப்படியே வால்மீகி வாக்குப்படி சீதை ராமனுடைய மனைவி, ராமன் மகாவிஷ்ணு என்னும் ஒரு வைணவக் கடவுளின் அவதாரம். சீதை மஹாலக்ஷ்மி; அதாவது மேற்படி வைணவக் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷ்மியின் அவதாரம். இங்கு வேறு சங்கையும் ஏற்படலாம். அதாவது விஷ்ணுவுக்கு இரண்டு பெண்ஜாதிகள் உண்டு. அவர்களுக்கு சீதேவி, பூதேவி என்றுகூடச் சொல்லுவார்கள். மற்றும் வேறுபல பெயர்களும் சொல்லுவார்கள். 

அப்படியிருக்க விஷ்ணு ராமாவதாரத்தில் ஒரு பெண்ஜாதியை மாத்திரம் அழைத்துக்கொண்டு மற்ற பெண்ஜாதியை ஏன் விட்டுவிட்டு வந்துவிட்டானோ விளங்கவில்லை. அல்லது ராமனுக்கு வேறு பல பெண்ஜாதிகளும் உண்டு என்பதாக வால்மீகி கூறுகிறபடி மற்ற பெண்ஜாதியையும் அழைத்து வந்தானோ என்பதும் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் பூதேவியும் ராமாயணக்கதையில் வருகின்றாள். ஆனால் பூதேவி ராமனுக்குப் பெண்ஜாதியாய் வரவில்லை. மற்றெப்படி வருகின்றாள் என்றால் மாமியாராய் வருகிறாள். 

அதாவது ராமன் சீதையை விபசாரி என்று சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்கிவரும்படி சொன்னபோது முதல் தடவை நெருப்பில் குதித்து வந்தது போதாமல் மறுபடியும் சந்தேகப்பட்டு குதித்துவரும்படி சொன்னதில் பூமாதேவி வந்து கோபித்து தன் மகளை (சீதையை) கூட்டிக் கொண்டு போய்விடுகிறாள். ஆகவே விஷ்ணுவாய் இருக்கும்போது சீதேவி பூதேவி என்பவர்கள் பெண்ஜாதிகளாகவும் ராமனாய் வரும்போது பூதேவி, சீதேவி என்பவர்கள் முறையே மாமியாராயும், மனைவியாயும் வருகிறார்கள். இதுவும் இப்போதும் சில இடங்களில் நடப்பதுண்டு. 

அதாவது கன்றும் தாயுமாகப் பார்த்து மாடு வாங்குவது போல் தாயும் மகளும் பயன்படும்படி சிலர் கல்யாணம் செய்து கொள்வதுண்டு. சில இடங்களில் முதலில் தாயார் பயன்பட்டு பிறகு மகளும் பயன்படுவதுண்டு. இந்தக் கதையில் ராமனுக்கு என்றாலும் சரி, விஷ்ணுவுக்கு என்றாலும் சரி, தாயும் மகளும் பயன்படுத்தப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் சீதை ராமாயணக் கதையில் தான் வருகிறாளே ஒழிய அதற்கு முன்பு வந்ததாக நமக்குத் தெரியவில்லை. 

ஆகவே ராமாயணக் கதைக்கு பின்புதான் விஷ்ணு பெண்ஜாதி சீதை என்று ஏற்பட்டிருக்க வேண்டுமே ஒழிய அதற்குமுன் ஏற்பட்டிருக்க நியாயம் தென்படவில்லை. ஆதலால் விஷ்ணுவின் மனைவிமார் தாயாரும் மகளும் என்று சொன்னால் எப்படி மறுக்க முடியும்? (இந்த முறைகள் ஒரு புறமிருக்கட்டும். இதனால் ஒன்றும் முழுகிப் போகவில்லை.) 

எப்படியிருந்தாலும் விஷ்ணு என்றாலும் சரி, ராமன் என்றாலும் சரி, அவன் ஆண் ஆனதால் அவர்களைப் பற்றிக் கேட்க யாருக்கும் அதிகாரமில்லை. எடுத்துக் கொண்ட விஷயத்தைக் கவனிப்போம். அதாவது சீதை கற்புடையவளாயிருந்திருக்க முடியுமா என்பதேயாகும். 

ராமாயணக் கதைக்கு ஒரு ஆதாரக்கதை அவசியக்கதை அதன் பூர்வோத்திரக்கதை என்பது ஒன்று வால்மீகியாலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால் விஷ்ணு ராமனாய் பிறக்க வேண்டிய காரணம் என்ன? லக்ஷ்மி சீதையாய் பிறக்க வேண்டிய காரணம் என்ன? சீதை என்னும் லக்ஷ்மியை மற்றொருவன் தூக்கிக் கொண்டுபோகவேண்டிய காரணம் என்ன? என்பவைகளுக்கு எல்லாம் அதில் நியாயம் சொல்லப்பட்டிருக்கிறது. 

அதென்னவென்றால் விஷ்ணுவானவன் ஜலந்தராசூரன் என்கின்ற ஒரு ராக்கதனுடைய மனைவி பிருந்தையைத் திருட்டுத் தனமாக மாறு வேஷம் பூண்டு புணர்ந்துவிட்டான். எப்படியென்றால் ஜலந்தராசுரன் மனைவி மகா பதிவிரதையாம். அவள் புருஷனை சிவன் கொன்று விட்டானாம். (மகாபதிவிரதையின் புருஷனை சிவன் எப்படி கொன்றானோ கொலை பாதகன் அதிருக்கட்டும்) இந்த சங்கதி அவளுக்குத் தெரியாதாம். (ஏனென்றால் அவள் பதி விரதையல்லவா? எப்படித் தெரியும் பாவம்) அப்படி இறந்துவிட்ட சமயத்தில் விஷ்ணுவானவன் அந்த ஜலந்தராசுரன் போல் உருமாறி அந்தம்மாளைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும் விஷ்ணுவின் புணர்ச்சி வேறுபட்டிருந்ததிலிருந்து அந்தம்மாள் இந்த உருமாறின விஷ்ணு தன் புருஷனல்ல என்பதாகத் தெரிந்து விஷ்ணுவுக்குச் சாபம் கொடுத்ததாகவும், அந்தச் சாபத்தில் "நீ என்னை கற்பை அழித்தது போல் உன் பெண்ஜாதியினுடைய கற்பை ஒரு அசுரன் அழிக்கவேண்டும்" என்றும் சபித்ததாகவும் அந்தச் சாபம் நிறைவேறவே மகாவிஷ்ணுவும் அவன் மனைவி மகாலக்ஷ்மியும் முறையே ராமனாகவும், சீதையாகவும் வந்ததாகவும் அந்த சாபம் நிறைவேறவே ராவணன் என்கின்ற அசுரன் தோன்றிச் சீதையைத் தூக்கிக்கொண்டு போனதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆகவே, பதிவிரதையான பிருந்தையின் சாபம் நிறைவேறுவதற்கு ஆகவே இவ்வளவு காரியமும் ஏற்பட்டிருக்கும் போது அந்த கற்பு கெடுவது என்கின்ற பாகம் மாத்திரம் நிறைவேறப்படாமல் எப்படி பாக்கியிருக்க முடியும்? என்பது ஒரு சாதாரண கேள்வியாக ஆகிவிடமுடியுமா என்பது யோசிக்கத்தக்கதாகும். 

விஷ்ணுவானவன் ஜலந்தராசுரன் மனைவியின் கற்பைக் கெடுக்காமல் இருந்திருந்தால்தான் சீதையின் கற்பு கெடாமல் இருந்திருக்க முடியுமே ஒழிய, ஜலந்தராசுரன் மனைவியின் கற்பு கெடப்பட்ட பிறகு சீதையின் கற்பு மாத்திரம் கெடாமல் இருந்திருக்கும் என்றால் ராமாயணக் கதையாவது பொய்யாயிருந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு ஆதாரமான முன் கதையாவது பொய்யாயிருந்திருக்க வேண்டும். 

ஆகவே விஷ்ணு ஜலந்தராசுரன் மனைவியை என்ன என்ன செய்தானோ அதையெல்லாம் ராவணேசுரன் என்பவன் சீதையை செய்துதான் இருக்கவேண்டும் என்பது மாத்திரமல்லாமல் கதைப்படி பார்த்தால் செய்து தான் தீரவேண்டும் என்றே சொல்லுவேன்.

ஏனெனில் ஒரு அசுரன் என்பவன் மனைவியை ஒரு ஆரியன் என்பவன் இப்படி அனுபவித்தான் அப்படி அனுபவித்தான் என்று ஆனந்தமாகப் பச்சையாக எழுதிவிட்டு ஆரியன் என்பவன் மனைவியை அசுரன் என்பவன் அனுபவித்தான் என்கின்ற விஷயத்தில் மாத்திரம் ஜாதி அபிமானம் காரணமாக ஜாடை மாடையாய் எழுதியிருந்தாலும் விவகாரத்துக்கு வரும்போது தாக்ஷண்யமில்லாமல் பார்க்கும் போது உண்மை வெளியாகித்தானே தீரவேண்டும். 

அன்றியும் சீதையை ராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின்பு ராமன் அந்த மீட்பை அரசியல் காரியத்தை உத்தேசித்து சீதையை மீட்டதாகவும் ராவணன் அனுபவித்ததை தான் அனுபவிக்க முடியாதென்றும் சொல்லி அவளை தனது மனைவியாக ஏற்க மறுத்த சமயத்தில் சீதை தைரியமாக விளக்கமாக தன்னை ராவணன் அனுபவிக்கவில்லை என்று சொல்லவே இல்லை. 

மற்றபடி என்ன சொன்னாள் என்றால் "நான் ஒரு பெண், அபலை, ராவணன் மகா பலசாலி அவனிடம் எனது சரீரம் சுவாதீனமாய் விட்டது. நான் என்ன செய்ய முடியும்? சரீரம் அவனுக்கு சுவாதீனமாய் இருந்தாலும் என் மனம் உன்னிடத்திலேயே தான் இருந்தது" என்று தான் சொன்னாளே ஒழிய மற்றபடி சந்தேகப்பட வேண்டாம் என்று சொல்லவே இல்லை. (இது வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.) 

ஆகவே அந்த முறையில் பார்த்தால் சீதை கற்புடையவளாய் இருந்திருக்க முடியுமா என்பது தான் இந்த வியாசத்தின் கேள்வியாகும்.

சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையை கற்பிப்பதற்கு ஆக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள். இந்தப் பெருமையைப் பற்றியும் கதையில் வால்மீகி ஜாடை மாடையாய் காட்டி இருப்பதுபற்றியும் நமக்கு இப்போது தகறார் இல்லை. ஆனால் கதையின் தத்துவப்படி மூலகாரணப்படி சீதை கற்புடையவளாக இருந்திருக்க முடியுமா என்பதுதான் கேள்வியாகும். 

ஆரியர்கள் தேவர்கள் அசுரர்கள் என்கின்ற விஷயத்தில் யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்றால் ஏன் துரோபதை சீதை அகலியை தாரை என்கின்ற முதலிய பஞ்சகன்னிகைகள், மகாபதிவிரதைகள் கோஷ்டியில் இந்த ஜலந்தராசுரன் மனைவியின் பெயரையும் சேர்த்து இருக்கக்கூடாது? என்று கேட்கின்றேன். 

இந்த நான்கு "உத்தம பத்தினிகளின்" யோக்கியதைகளை விட பிருந்தையின் யோக்கியதை என்ன கெட்டுவிட்டது? அந்தம்மாள் பதிவிரதா தன்மைக்கு ஆதாரம் மகா விஷ்ணுவுக்கே (கடவுளுக்கே) சாபம் கொடுத்தது. அந்த சாபம் நிறைவேறிற்று என்றால் இதற்குமேல் உரைகல் வேறு என்ன என்று கேட்கின்றேன். 

ஆகவே ஆரியர்கள் சகல வழிகளிலும் சகல துறைகளிலும் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்வதும் ஆரியர்கள் அல்லாதவர்களை இழிவு கீழ்மைப்படுத்துவதுமான காரியத்திலேயே இருந்து வந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்த மாதிரியான காரியத்துக்காக அவர்கள் எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கிறார்கள் என்பதிலும் நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. 

உதாரணமாக சென்னையில் அசம்பளி தேர்தலின் போது ராமசாமி முதலியாரை தோற்கடிப்பதற்காக எந்த வகையிலும் யாதொரு சம்பந்தமில்லாத ஒரு பெரும் பழியை அதாவது ராமசாமி முதலியார் ஒரு பெண்ணின் தாலியை அறுத்துவிட்டார் என்று பிரசாரம் செய்து அவரை தோற்கடித்தார்கள் என்றால் இவர்கள் இனி என்னதான் செய்யமாட்டார்கள்? இதற்குமுன் என்னதான் செய்திருக்க மாட்டார்கள் என்பது விளங்கும். ஆதலால் கண்மூடித்தனமாக எல்லா புராணங்களையும் நம்பாமலும், மேம்புல்லை மேயாமலும் நன்றாய் ஊன்றிப் பார்த்தால் அவைகளின் யோக்கியதை அத்தனையும் ஆபாசமாகத்தான் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகவே இதை எழுதுகிறேன்.

------------------- சித்திர புத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - “குடி அரசு” கட்டுரை 08.03.1936 

http://thamizhoviya.blogspot.com/2010/11/blog-post.html

சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள்.

மாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும் அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள். 

லட்சுமணன், 'இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப் போகமாட்டேன்' என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்க வேண்டும்; அங்கு இராவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு தன் கணவனையும் கொழுந்தனையும் துரத்திவிட்டுத் தான் மட்டுமே தனியே இருக்கிறாள். 

இராவணன் காமப்பித்தனைப்போல் சீதையை வர்ணிக்கிறான். உடல் உறுப்புகள் அத்தனையும் ஒன்றையும்விடாது அவைகளுக்கு ஒப்புவமை கூறுகிறான். 

ஆடையினுள் மறைந்திருக்க வேண்டிய அங்கங்களாகிய தொடை, பின்தட்டு, ஸ்தனங்கள் இவைகளுக்கும், அங்க உவமை கூறும் அளவுக்கு அந்த அங்கங்கள் இராவணனுக்குத் தெரிந்திருக்கின்றன! 

இத்தனையும் பேசிய இராவணனுடன், 'முறுவல் கொண்டு பேசுகிறாள்; அமுது படைக்கிறாள்; "உள்ளே வாருங்கள், உட்காருங்கள்; சாப்பிடுங்கள்" என்று உபகாரம் செய்கிறாள். 

அவள் அவனுக்கு உபசரிக்கும் பொழுது, "வாயிற் படியின் வழியே தன் கணவனும், கொழுந்தனும் வருகிறார்களா என்று திரும்பிப் திரும்பிப் பாத்துக்கொண்டே உபசரிக்கிறாள்" என்று கூறபப்படுகிறது. 

பிறகு இராவணன், வா என்னுடன் என்கிறான்; இவள் சம்மதித்தே அவனுடன் சென்றாள் என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு. இவளுக்கும் அவனுக்கும் நடந்த மேற்கண்ட சம்பாஷைணைகளும் காட்சிகளும் மட்டும் அல்ல. 

சீதை சம்மதித்துச் சென்றதற்கு ஆதாரம் 

தனக்கு எவ்வளவோ மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையிடத்தில் ....... ஆசை மேலிட்டு, 'தன் ரோஹினியைப்பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின் தலைமயிரையும், வலது கையால் தொடைகளையும் சேர்த்துப்பிடித்தெடுத்தான் (சி.ஆர்.சீனிவாசய்யங்கார். மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப் பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157 ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165 ஆம் பக்கத்திலும் காணப்படுகிறது. 

இவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப்பானாகில், சீதை இராவணனுக்கு உடன்பட்டவள் என்றே பொருள்படும். 

காரணம், இராவணன் தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்கு நூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால் அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். இதன் படியே இராவணனுக்குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள். 

மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந்திருக்கையில் அவளுடைய முகம் 'காம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளுடைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல் - புரண்டன' (பக்கம் 167) என்று கூறப்படுகிறது. 

இலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப்புரத்தில் வைத்தான் (பக்கம் -173) என்று கூறப்படுகிறது. 

சீதைக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது 

'விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது, துந்துபி அடிப்பது போல் சப்தம் உண்டாயிற்று.' 

(பக்கம் 155, சர்க்கம் 55) 

குறிப்பு : எனவே, இருவரும் மாடியில், அந்தப்புரத்திற்கு சென்றடைந்து விட்டனர். அதுவும் இருவரும் மாடியில் 'ஏறும்பொழுது' துந்துபி அடிப்பதைப் போல் இருந்ததாம். இருவர் நடையும், அதாவது இராவணன் எவ்வளவு சந்தோஷமாகவும், ஒய்யாரமாகவும், ஆனந்தமாகவும், கம்பீர நடையுடன் காலடி எடுத்து வைத்தானோ, அதேபோல் சீதையும் ஒய்யார நடையுடன், இருவரும் ஒருவர் தோளின்மேல் ஒருவர் கையைப் பிடித்து அணைத்துக் கொண்டு ஏறி இருக்கவேண்டும். அந்தக் காலடியின் சப்தம் துந்துபி அடிப்பதைப்போல் இருந்திருக்கிறது. அன்றியும், இனியும் மேலே நடப்பதைக் கவனிப்போம். 

இராவணனைப் பார்த்து சீதை, 'பிறகு வருவதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது கிடைக்கும் சுகமே பெரியதென்று நினைக்கிறாயே' (பக்கம் 171) என்று கேட்கிறாள். இதனால், இராவணன் சீதையிடம் சுகம் அனுபவித்துவிட்டான்! ஆராய்ந்து பார்த்தால் அவளிடம் சுகம் அனுபவிக்கும் நேரத்தில் இவ்வார்த்தைகளைச் சீதை இராவணனிடம் கூறுவது நன்கு தெரியும். 

இதற்கு இராவணன் சமாதானம் கூறுகையில், 'சீதே! அக்கினி சாட்சியாக உன் கையைப் பிடித்த கணவனைக் கைவிடுவது அதர்மமென்றெண்ணி வெட்கப்படுகிறாயோ? நம் இருவருக்கும் நேர்ந்த சம்பந்தம் தெய்வகதியால் ஏற்பட்டது. இது ரிஷிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது' (பக்கம் 177) என்று சமாதானம் கூறுகிறான். சீதை வருத்தப்படுவதாகவோ, ஆத்திரப்படுவதாகவோ கூறவில்லை. வெட்கப்படுகிறாளாம் விருப்பம் இல்லாவிட்டால் வெட்கப்படுவது தான் விருப்பமில்லை என்பதைக் காட்டும் அறிகுறி போலும்! ஆத்திரமோ, கோபமோ கொண்டிருப்பாளாகில் விருப்பம் இல்லை என்று கூறலாம். 

எனவே, சீதையிடம் இராவணன் செய்த காம லீலைகளுக்கும் அவள் உட்பட்டிருக்கிறாள். ஆனால், பெண்களின் இயற்கைக் குணப்படி வெட்கப்பட்டிருக்கிறாள். 

மேலும் ஆரண்யகாண்டம் 55 ஆவது சர்க்கம் 678 ஆவது பக்கத்தில் தாத்தா தேசிகாச்சாரியார். மொழி பெயர்ப்பில் கூறப்படுவதாவது - 'இனி நீ நாணமுறற்க. இதனால் தர்மலோபமொன்றுமிலது. உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை நேர்ந்தமையின் இதுவும் தர்மமேயாகும. இஃது ரிஷிகளாலும் உகுக்கப்பட்டது' என்று கூறப்படுகிறது. 

'இனி நீ நாணமுறற்க' இதன் பொருள் என்னவென்றால் இனிமேல் எதற்காக வெட்கப்பட வேண்டும்? உனக்கும் எனக்கும் தெய்வகதியால் சேர்க்கை நேர்ந்துவிட்டது. என்கிறான். அதாவது காரியம் முடிந்துவிட்டது. இனிமேல் வெட்கப்பட்டு என்ன பலன் என்ற கருத்தில் இராவணன் கூறுகிறான். எனவே இருவருக்கும் சேர்க்கை நேர்ந்தது என்பதை இதன்படி உறுதிப்படுத்தலாம். 

மேலும் இராவணன் கூறியதாக அதே மொழி பெயர்ப்பாளர் இந்தச் சம்பவத்திற்குக் குறிப்புத் தருகையில் 'இராவணன் பிராட்டியாரை முன்போலவே தாசனாகச் செய்து கொள்ளும்படி விண்ணப்பம் செய்தான்பூ என்கிறார். அதாவது முன்போலவே என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது இருவருக்கும் சம்பந்தம் ஏற்பட்ட முன் சம்பவத்தைப் போலவே இனி மேலும் இருக்க வேண்டும் என்ற கருத்தில் வேண்டினான் என்கிறார். ஆகவே, மொழி பெயர்ப்பாளரின் ஆராய்ச்சியின் படியும் சீதைக்கும் இராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்பது உறுதி. 

(கானகத்தில் சீதையை விட்டுப் பிரிந்த இராமன், சீதையை நினைத்துக் காமத்தால் மனம் உருகிப் பேசுகின்றவைகளையும், இலட்சுமணனிடம் கூறும்போது, தான் சீதையுடன் அனுபவித்த இன்பத்தை வெட்கமின்றி விளக்குவதையும் ஆரண்ய காண்டத்தில் கண்டுள்ளவைகளை எடுத்துக் கூறினேன்) 

இனி, கிஷ்கிந்தா காண்டத்தில் லட்சுமணனிடம் ராமன் கூறுகின்றான்; 

என்னிடம் இன்பங்களை அனுபவித்தாள்! 

அவளுடன் சுகித்திருக்க, ஏகாந்தமாய் வந்த இடத்தில் அவளைக் கவர்ந்து சென்றானே! இப்படிப்பட்டவளிடம் போகங்களை அனுபவிப்பார்கள் பாக்கியசாலிகள்! 

சீதையுடன் சுகிப்பதே போதும்; ராஜ்யம் தேவையில்லை.

------ தந்தை பெரியார் அவர்களால் (எல்லா ஆதாரங்களைப் பொறுத்தே) தொகுக்கப்பட்டவை) ----நூல்:"இராமாயணக் குறிப்புகள்" பக்கம் 29-34

http://thamizhoviya.blogspot.com/2008/04/blog-post_03.html


சீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டாளா?

20.12.1955 அன்று ராசிபுரம் ரங்கவிலாஸ் தியேட்டரில் நாடகத் தலைமையேற்று பெரியார் அவர்கள் பேசுகையில், குறிப்பிட்டதாவது:

சூழ்ச்சியில் வலுத்த பார்ப்பனர்கள் நம் நாட்டுப் பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களிடம் காட்டுமிராண்டிப் பழக்க வழக்கங்களைப் புகுத்திவிட்டார்கள். தன் சுயநலத்தையே பெரிதாகக் கொண்டு பார்ப்பனர்களுக்கும் இதுவரை நம் மக்கள் அடிமைகளாக இருந்ததுமன்றி கீழ்ஜாதிகள், நான்காம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி, சூத்திரன், பஞ்சமன், பார்ப்பனரின் இழிமகன், பார்ப்பனரின் கூலி, எப்பொழுதும் உடல் உழைப்புக் கொண்டு வாழும் தொழிலாளி என்று ஆக்கப்பட்டு விட்டான்.

இந்நிலையை என்றைக்கும் நிலைநாட்டவும், அழியாமல் மேன்மேலும் இந்நிலை வளர்ந்து கொண்டே போகவும்தான் பார்ப்பனர்கள் தங்கள் மதம், கடவுள், புராணம் இவற்றை உண்டாக்க வேண்டியதாயிற்று. அவற்றைப் பிரசாரம் செய்ய பல வழிகளிலும் முயற்சி எடுக்கும் முறைகளில் ஒன்றுதான் கலைகள் என்ற பெயராலும் பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

கலைஞர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களைப் பற்றியே பிரசாரம் செய்பவர்களாக இருந்ததால்தான் அவர்கள் கலைஞர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். கடவுளின் பித்தலாட்டத்தையும் மதம், சாஸ்திர, புராணங்களின் அயோக்கியத் தன்மைகளையும் வெளியிடுபவர்கள் கலையில் சிறந்த வல்லுநர்களாக இருந்ததாலும், அவர்கள் நாஸ்திகர்கள், பார்ப்பனத் துவேஷிகள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள், ஏன்? இன்றைக்கும் எத்தனையோ கலைஞர்கள், புலவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் கூலிகளும், கடவுள் பிரச்சாரக்காரர்களும்தான் ஆவார்கள். மதப் புரட்டுகளையும், கடவுள் பித்தலாட்டங்களையும் வெளியிடுவார்களேயானால் அவர்கள் கலைஞர்கள் என்று அழைக்கப்படுவதில்லை.

கலைகளில் நாடகம், நடனம், சங்கீதம், ஓவியம் இப்படி பல வகை இருக்கின்றன என்றாலும் அவை ஒவ்வொன்றிலும் மதத்தையும், கடவுளையும் புகுத்தி இருக்கிறார்கள். கடவுள் அவதாரம் எடுத்ததாகக் கூறப்படும் புராணக் கதைகளை நடிப்பவர்கள்தான் நடிகர்கள். அப்படிப்பட்ட நாடகத்திற்குத்தான் அதிக மதிப்பும், சலுகையும் அளிக்கப்படுகிறது.

நடனக் கலையோ கடவுள் இப்படி ஆடினார்; கிருஷ்ணன் இன்னின்ன லீலைகள் செய்தான் என்பதைத்தான் சித்திரித்துக் காட்டப்படுகிறது. அதன்றி, அய்ந்து வயதுப் பெண்ணும் நடனம் ஆடுகிறதென்றால், காமமே உருவெடுத்தாற்போல் கண்ணனின் லீலா வினோதங்களை சித்திரித்து ஆடுகின்றனர். இப்படிப்பட்ட நடனக் கலையினால் அக்கலையைக் கைக்கொள்பவர்கள் மட்டுமின்றி, அதை ரசிக்கும் ரசிகனும் அவ்வித உணர்ச்சி கொள்ளும்படி ஆடுகிறான். சித்திரக்கலையும் அப்படித்தான். கடவுளின் உருவத்தை இப்படி அப்படி என்று இவர்களாக நினைத்துக் கொண்டான். அதை வரைந்து காட்டுவதுதான் சித்திரக்காரர்களின் திறமையாக இருக்கிறது.

இப்படிப் பலவிதமான கலைஞர்கள் என்பவர்களின் திறமையெல்லாம் மத சம்பந்தப்பட்டவற்றைப் பிரச்சாரம் செய்வதற்கென்றே அமைந்துவிட்டன. அன்றியும், மேன்மேலும் மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தவும், அநாகரிகத்தை வளர்க்கவும், பொய்ப் புரட்டுகளை உண்டாக்கவும் தான் உபயோகப்படுகின்றன.

பாரதத்தில் வருகிற திரவுபதி என்று கூறப்படுகிற பலே கைகாரி மகாபத்தினி என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு மனைவியாகியவள் அய்ந்து பேர்கள் கூடி தன்னை அனுபவிக்க இசைந்துள்ளதும் அன்றி, அய்ந்து பேர்களும் போதாது. ஆறாவதாகக் கர்ணன் என்பவன்மேல் ஆசை கொண்டிருந்தாளாம். இப்பேர்ப்பட்ட ஆபாசம் நிறைந்த கதை நாடகமாக நடிக்கப்படுகிறதென்றால், இதனால் என்ன அறிவு வளர முடியும்? திரவுபதியைப் போன்று ஒவ்வொரு பெண்ணும் நடந்து கொள்ள வேண்டும். அல்லது ஒருவன் மணந்த மனைவியை அண்ணன் தம்பிகள் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனைப் பேர்களும் அனுபவிக்கவேண்டும் என்பதா? இதில் என்ன கருத்து இருக்கிறதோ தெரியவில்லை. அன்றியும் பாரதத்தில் வருகிற பஞ்சபாண்டவர்கள் என்ற அத்தனை பேர்களுள் ஒருவராவது தன் தகப்பனுக்குப் பிறந்ததாகக் கூறப்படவில்லை. ஒவ்வொருவனையும் தனித்தனியே கள்ளப் புருஷனுக்குப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதைப்போன்று, இராமாயணம் என்ற புராணத்தின் ஊழலோ மிகவும் மோசமானது. அதில் வரும் பத்தினி என்று கூறப்படும் சீதையின் அயோக்கியத்தனமோ கொஞ்சமல்ல; தன் கணவனை எப்படியும் ஏமாற்றி விட்டு இராவணன் பின் செல்லவேண்டும் என்றே திட்டமிட்டு, தான் தனியாக இருக்கும் நிலையை ஏற்படுத்தவும், அது சமயம் இராவணன் தன்னைத் தூக்கிக் கொண்டு போகவேண்டும் என்பதற்காக மானைப் பிடிப்பதற்கென்று ராமனையும், பிறகு ராமனுக்குத் துணை செய்ய லட்சுமணனையும் அனுப்பி இருக்கிறாள். முன் கூட்டியே செய்த ஏற்பாட்டின்பேரில் தயாராக இருந்த இராவணன்அங்கு வந்து அவளை அழைத்துச் சென்றிருக்கிறான்.

இந்த இடத்தில் சீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்படவில்லை; சீதையே இராவணன் மேல் இச்சை கொண்டு அவன் பின்னால் சென்றிருக்கிறாள் என்பதை நன்றாகக் கூற முடியும். அப்படிக் கூறுவது என் சொந்தக் கருத்தல்ல; பார்ப்பனர்கள் எழுதிய இராமாயணத்திலேயே ஆதாரம் எடுத்துக் காட்டுவேன்.

இராவணனுக்கு ஏற்பட்டிருக்கும் இரண்டு சாபங்களின் காரணமாக, இராவணன் சீதையை, சீதை சம்மதமின்றி தொட்டு எடுத்திருப்பானாகில் அவன் தலை வெடித்திருக்க வேண்டும். அல்லது உடம்பு நெருப்புப் பற்றி எரிந்திருக்க வேண்டும். இரண்டு ஆபத்துகளில் ஒன்றும் நேரவில்லை. சீதையின் தொடையை ஒரு கையாலும், மறு கையால் கூந்தலையும் பிடித்து தூக்கிச் சென்றிருக்கிறான். இதற்கு இராமாயண பக்தர்கள் என்ன பதில் கூற முடியும்?

இராவணனுக்குக் கொடுக்கப்பட்ட சாபங்கள் கப்ஸா என்று கூற முடியுமா? அல்லது சீதை இசைந்திருக்கிறாள்; இராவணனின் மேல் ஆசைப்பட்டு அவனுடன் சென்றிருக்கிறாள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

இதுமட்டுமல்ல, இன்னமும் இராமாயணத்தை மேன்மேலும் படித்து, துருவித் துருவி ஆராய்ந்தால்தான் அதனுடைய முழு வண்டவாளங்களும் நாளுக்குநாள் மேன்மேலும் புலப்படுகின்றன.

இராவணனிடமிருந்து மீட்டு வரப்பட்ட சீதை இராவணன் படத்தை வரைந்து கொண்டு அழுது கொண்டிருந்தாளாம். அதைக் கண்ட இராமன் கோபம் கொண்டு அவளைக் கொலை செய்ய முற்படுகிறானாம். அந்தச் சம்பவம் இராமாயணத்தில் கூறப்படுகிறது.

வால்மீகி இராமாயணத்தைவிட மேலான இராமாயணம் ஆனந்த இராமாயணம் என்று கூறுவார்கள். அதில் கூறப்படுவதை அப்படியே சி.ஆர். சீனிவாசய்யங்கார் கூறுகிறார்.:

இராவணன் வீட்டிலிருந்து சீதை மீட்கப்பட்டு இராமனுடைய அந்தப்புரத்தில் தனியாக இருக்கும்பொழுது அவளுக்குப் பழைய நினைப்பு வந்துவிடுகிறது; அதாவது இராவணனுடன் அனுபவித்த இன்பங்கள் எல்லாம் மனதில் தோன்றுகின்றன.

அவள்தன் மனத்தில் இராவணனைச் சித்தரித்துக் கொண்டு இராவணனின் உருவத்தை சித்திரமாக வரைகிறாள். அதுசமயம் இராமன் அங்கு வந்து விடுகிறான். இராமனைக் கண்டவுடன் சீதை அந்தப் படத்தைப் படுக்கைக் கட்டிலின் கீழ் போட்டு விடுகிறாள். இதைக் கண்டு கொள்ளாத இராமன் சீதையிடம் சல்லாபங்கள் செய்ய முயற்சிக்கிறான். இருவரும் ஜாலியாக இருக்கும்பொழுது கீழே கிடந்த இராவணனின் சித்திரமானது தெய்விகசக்தி கொண்டதாகி படபடவென்று அடித்துக் கொண்டதாம்.

அப்போது இராமன், யாரடா இந்த வேளையில் சப்தம் செய்கிறவனென்று கட்டிலின் கீழ் கீழே குனிந்து பார்த்ததும் அங்கு இராவணனின் படம் கிடக்கிறது. அதை எடுத்து சீதையிடம் காண்பித்து, உனக்கு இன்னமும் அந்த புத்தி போகவில்லையே! எவ்வளவு துணிவிருந்தால் இன்னும் இராவணன் ஞாபகமாகவே இருப்பாய் என்று கடிந்துவிட்டு உடனே அவளைக் கொலை செய்து வரும்படி லட்சுமணனை அனுப்புகிறான். அவன் காட்டிற்குச் சென்று அவளை உயிருடன் விட்டு விட்டு ஏதோ ஒரு பொய்யான கை ஒன்றைக் கொண்டு வந்து இராமனிடம் காண்பித்து சீதையைக் கொலை செய்து அவள் கையை எடுத்து வந்திருக்கிறேன் என்று ஏமாற்றி விட்டான். இப்படி சீதையின் யோக்கியதை இருக்க அவள் எப்படி பதிவிரதைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்?

இதனால், இராமன் ஒருவன் இருந்தான், அவன் மனைவி சீதை என்பவள் இருந்தாள் என்பதையோ நாங்கள் அப்படிப்பட்ட கதை ஒன்று நடந்திருக்கிறது என்பதையோ ஒப்புக்கொள்வதில்லை என்றாலும், அதன்மூலம் பார்ப்பனர்கள் யோக்கியதை என்ன? அன்று எழுதிய பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட நாகரிகம் கொண்டவர்கள்? அவர்களில் ஒரு பெண் பதிவிரதை என்றால் அவளுடைய நடத்தை எப்படி இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே, புராணங்கள் நடந்ததாகக் கூறப்படுவது பொய் என்பதோடு, அதன்மூலம் பார்ப்பனர்களின் நாகரிகம் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

----------------- பெரியார் - “விடுதலை”, 24.12.1955

http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_2455.html

சீதையின் பஜாரித்தனம்!

சீதை தன் கணவனைப் பேடி, மனைவியைக் கூட்டிக் கொடுக்கும் கூத்தாடி என்று பேசுதல்! 

இராமன் தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி. 

'ராமா! உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள். உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை. என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் போனாய் என்று எனது தந்தையார் கேள்விப்படின், 'ஹா! புருஷவேஷத்துடன் வந்த ஒரு பெண் பிள்ளை (பேடி)க்கா என் புதல்வியைக் கொடுத்தேன்!' என்று தம்மை நொந்து கொள்வார். இம் மடவுலகர், இராமனிடம் சூர்யனைப் போன்ற தேஜஸ் ஜொலிக்கின்றது என்று கூறுகின்றனர்.

இது முழுப் பொய்யான வார்த்தை மனைவியைப் பிறர்க்கு ஒப்படைத்துப் பிழைக்கும் தன்மையான கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறர்க்குக் கொடுக்க விரும்புகின்றனை' (அயோத்தியா காண்டம் 30 ஆவது சர்க்கம்; 229 ஆவது பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காராச்சாரியார் மொழி பெயர்ப்பு) 

பதிவிரதைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சீதை தன் கணவனிடம் கூறும் வார்த்தைகளா இவைகள்? கடை வீதிப் பஜாரி கூட இப்படிப் பேசப் பயப்படுவாளே! 

சீதை தன் கொழுந்தனிடம் நடந்து கொண்ட மரியாதையின் லட்சணம் 

சீதை இலக்குமணனை, 'சக்களத்தி மகன், த்ரோஹி பரமசத்துரு, என்னைக் கைப்பற்ற வந்தவனே, வஞ்சகா, துஷ்டா, இரக்கமற்றவனே, மஹாபாவி, குலத்தைக் கெடுக்க வந்த பிதிருத்ரோஹி, ருத்ராட்சப் பூனையைப் போன்றவனே, எந்த பாபத்தையும் செய்பவனே, மஹா யோக்கியனைப் போல் வந்தவனே, என்னைக் கைப்பற்ற உன்னைப் பரதன் அனுப்பினானோ, அல்ப ஜந்துவே' என்று ஒரு பெண் என்ற லட்சணத்துக்கே கொஞ்சங்கூடப் பொருத்தமின்றிக் குடிவெறியில் உளறிய குடிகாரியைப்போல் இலக்குமணனைப் பேசுகிறாள். இவைகள் கீழே ஆதாரங்களுடன் தரப்படுகிற்ன. 

(சி. ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு) 

ஆரண்ய காண்டம், சர்க்கம் 45ல் 122-123-124-125 ஆம் பக்கங்களில் காணப்படுவன : 

சீதை : 'இராமன் தாய்க்கு சக்களத்தி மகனான துரோஹி! மித்ரனைப் போல் அவரைப் பின் தொடர்ந்து வந்த பரம சத்ரு, என்னைக் கைப்பற்ற விரும்பி அவருடைய மரணத்தைக் கோரி இருக்கிறாயோ? உன் அண்ணனிடத்தில் உனக்கு எவ்வளவு ஸ்நேகமுமில்லையென்று இப்பொழுதல்லவா தெரிகிறது. எந்தக் கெட்ட எண்ணங்கொண்டு இங்கே நிற்கிறாயோ. என்னைக் காப்பாற்ற இங்கே இருக்கிறேன் என்று சொல்லுவது வஞ்சக வார்த்தை.' 

இலக்குமணன் : தாயே ...... தாங்கள் இப்படிச் சொல்லத்தகாது...... தங்களை இந்த வனத்தில் ஒண்டியாய் விட்டுப் போக எனக்கு மனம் வரவில்லை. 

சீதை : 'துஷ்டா! இரக்கமற்றவனே! க்ரூர ஸ்வாபமுள்ள மகா பாவி! இட்சவாகு குலத்தைக் கெடுக்கவந்த பிதிருத்ரோஹி! என்மேல் ஆசை கொண்டு ராமனுக்கு இந்த அபாயம் எப்பொழுது நேரப்போகிறதென்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறாயோ?..... உன்னைப் போன்ற சக்களத்தி மகன்கள் இப்படிச் சொல்வது ஆச்சர்யமா? நீங்கள் கொடியவர்கள், துஷ்டர்கள், ருத்ராட்சப் பூனையைப்போல் நிஜஸ்வபாவத்தை மறைந்து நடப்பவர்கள் எந்தப் பாவத்தையும் செய்வீர்கள். மகாயோக்கியனைப் போல எங்களுடன் வனத்திற்கு இதற்காகவா வந்தாய்? என்னைக் கைப்பற்ற எண்ணி வந்தாயோ? அல்லது பரதன் உன்னை அனுப்பினானோ? உங்களுடைய எண்ணம் பலிக்காது. உங்களைப் போன்ற அல்ப ஜந்துக்களை மனசாலும் நினைப்பேனோ?'... 

இலக்குமணன் : 'தாயே .... முற்றிலும் உசிதமல்லாத வார்த்தைகளைச் சொல்லுவது ஸ்தீரிகளுக்கு ஆச்சரிய மில்லை, அவர்களுடைய சுபாவம் எப்பொழுதும் இப்படியே அடக்கம், பொறுமை, வினயம் முதலிய நற்குணங்கள் இல்லாமல் சபல சித்தத்துடன் கூர்மையான வார்த்தைகளால் புருஷர்களின் ஹிருதயத்தைப் பிளப்பது, பரம ஸ்நேகமுள்ளவர்களை விரோதிகளாக்குவது, அவர்களுடைய தொழில் ..... உங்கள் வார்த்தையைக் கேட்டு என் மனம் பதறுகிறது. மகா ஞானியான ஜனகருக்கு நீ எங்கே வந்து பிறந்தாய்! உத்தம குணங்களால் அலங்கரிக்கப்பட்ட விதேக சக்ரவர்த்திகளின் வம்சத்தில் எங்கே தோன்றினாய்?..... என்னிடத்தில் சந்தேகித்து இப்படிப்பட்ட கோரமான பாபத்தை என் தலையிலே சுமத்தினால் உன்னைச் சுட வேண்டும்! சீ,சீ, இப்படிப்பட்ட நீ இப்பொழுதே இறந்தால் லோகங்கள் சுகப்படும். ஸ்திரீகளுக்கே துஷ்டத்தனம் ஸ்வபாவமோ?..... இந்த வார்த்தைகளைச் 

சொல்லும் நீயும் ஒரு ஸ்திரியா? நல்லது, இராமன் இருக்குமிடம் போகிறேன்!' 

சீதை : 'பாபி வஞ்சகா த்ரோஹி. இப்படியாவது பேசிக் கொண்டு இன்னும் சற்று நேரம் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று எண்ணுகிறாயோ?' 

லட்சுமணன் : (மனதிற்குள்) 'இந்தக் கோரமான வனத்தில் இவளை இப்படி அனாதையாக விட்டுப் போகிறோமே' என்று நினைத்துகொண்டு அவ்விடம் விட்டு அகன்றான். 

குறிப்பு : 'பதிவிரதை' 'லட்சுமியின் அவதாரம்' என்பவளுக்கும் அவளின் கொழுந்தன் 'கடவுளின் அவதாரம்' 'விஷ்ணுவின் மறுபிறவி' இராமனின் தம்பி இலட்சுமணன் என்பவனுக்கும் நடந்த உரையாடலின் லட்சணம் இது! பதிவிரதை தன் கொழுந்தனைப் பேசும் பேச்சுகளா இவைகள்? 

அற்பபுத்தி கொண்ட பஜாரிப் பெண்கள் கூட இப்படிப் பேசப் பயப்படுவார்களே! அப்படிப்பட்ட பேச்சுகள் பதிவிரதை பட்டியலில் சேர்க்கப்பட்ட சீதையின் வாயால் வருகின்றன! 

----------------- தந்தைபெரியார் - நூல்:"இராமாயணக்குறிப்புகள்"

http://thamizhoviya.blogspot.com/2008/04/blog-post_2139.html

சீதை ஆத்திரமடைந்து ஒரு அளவுக்கு தந்திரமாக தனது கற்புத் தவறை ஒப்புக்கொள்கிறாள்!

இதைக் கேட்ட சீதை அகங்காரத்துடனும், ஆணவத்துடனும், கணவனிடம் பேசுகிறோமே என்பதுகூட இல்லாமல், கணவனைக் கண்டித்துரைக்கிறாள். 

அற்பனைப்போல் பேசிவிட்டாய்! 

'ஏதோ ஊரும் பேரும் அற்ற சாதாரண ஸ்திரீயைப் பார்த்துப் பேசுவது போல் பேசி விட்டீர்களே! 

வீரனுக்கழகா உன் வார்த்தைகள்! 

சுத்த வீரனென்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு இது அழகா?' 

குறிப்பு : இராமனை இவ்விதம் சீதை கடும் கோபத்தால் 'நீ பேசியது அற்பனைப் போல் பேசினாய்; வீரநனுக்குள்ள பேச்சுகளைப் பேசவில்லை' எனறு கூறி இராமனை, அற்பன், வீரமில்லாத கோழை என்று நிந்தித்தும் பேசுகிறாள். பதிவிரதைப் பட்டியலில் சேர்க்கப்பட்டவள் கணவனைப் பேசுகின்ற வார்த்தைகள் இவைகள் தானா என்பதைச் சிந்தியுங்கள். 

இது மட்டுமா? சீதை, 'இராவணனுக்கு சம்மதித்தேன்' என்று துணிச்சலோடு இராமனிடம் கூறிவிடுகிறாள் என்பதையும் காணலாம். 

இராமன் சீதையிடம் சந்தேகப்பட்டு அவளை ஏற்றுக் கொள்ள மறுத்தவுடன், சீதை இராமனைக் கடிந்து பேசி, 'நீ அற்ப மனிதனைப் போல் என்னைப் பேசிவிட்டாயே' என்று பேசி மேலும் அவளே இராமனிடம் துணிவோடு 'நான் இராவணனுக்கு சம்மதித்தேன்' என்கிறாள். 

'என்னை இராவணன் தொட்டெடுத்தான் என்கிறீர்கள்; வாஸ்தவமே' (பக்கம் 490) 

குறிப்பு : சீதையை இராவணன் தொட்டு எடுத்தான் என்பதால்தான் சீதை இராவணனுக்கு நிச்சயம் உடன் பட்டிருக்கவேண்டும் என்பதை இராமன் நிச்சயிக்கிறான். ஏனெனில் இராவணன் இஷ்டப்படாத எந்தப் பெண்ணையாவது தொட்டான் என்றால் அவன் உடல் நெருப்புப் பற்றி எரியவேண்டும்; அல்லது தலை வெடித்து விடவேண்டும். இந்த இரண்டும் சாபங்களும் இராவணனுக்கு இருக்கையில், அவன் சீதையைத் தொடும்பொழுது அவனுக்கு ஒரு சாபமும் நிறைவேறவில்லை. ஆகவேதான் இராமனுக்குச் சந்தேகம்; இதைத்தான் சீதையும் குறிப்பிடுகிறாள் 'தொட்டு எடுத்தான் என்று சந்தேகப்படுகிறீர்கள்' என்று கூறுகிறாள். 

மேலும் அவள் கூறுகிறாள்; 'நான் ஸ்திரீ; ஒண்டி; அநாதை; அவனோ ராட்சதன்; அளவற்ற பலசாலி; க்ரூரன்; ஆயுதபாணி; சகாயமுள்ளவன் என்னால் கூடியவரை தடுத்தேன். எனக்கு எள்ளளவாவது அவனுடன் போக வேண்டும் என்று ஆசை இருந்ததா?' 

(மேற்படி பக்கம்) 

குறிப்பு : எப்படி தந்திரத்தால் தப்பித்துக் கொள்கிறாள் பாருங்கள். இராவணன் அபபடிப்பட்டவன், இப்படிப் பட்டவன், நான் பெண் பிள்ளை, ஒண்டியாக இருந்தேன். ஆகவே நான் என்ன செய்வேன் என்கிறாள். அது மட்டுமா? இன்னமும் தந்திரத்தைப் பாருங்கள். 

'என் தேகம் பிறர்க்கு வசப்பட்டது. சுதந்திரமற்ற நான் என்ன செய்ய முடியும்? என் வசத்திலிருந்த என் இருதயம் அப்பொழுதும், இப்பொழுதும், எப்பொழுதும் தங்களிடத்திலேயே நாடி இருக்கிறது. 

(மேற்படி பக்கம்) 

குறிப்பு : என் திரேகம் மட்டும் அவனிடம் மாட்டிக் கொண்டது. ஆனால் என் இருதயம் எப்பொழுதும் உங்களிடம் தான் இருக்கிறது என்கிறாள். இதன் கருத்தென்ன? சிந்தியுங்கள். என் உடலை அவன் அனுபவிக்கையில் என் மனது உங்களிடம் தான் இருந்தது. இதன்படி, உடலை மட்டும் அவன் சுகித்தான் என்பதுதானே பொருள்? எனவே சீதையை தான் இராவணனுக்கு இசையும்படி ஆகிவிட்டது என்று ஒப்புக்கொள்கிறாள். 

----- பெரியார் அவர்களால் (எல்லா ஆதாரங்களைப் பொறுத்தே) 
தொகுக்கப்பட்டவை -நூல்: "இராமயணக் குறிப்புகள்" பக்கம் 58-60

இப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தைத்தான் சன் தொ(ல்)லைக்காட்சி காசுக்காக ஒளிபரப்பி வருகிறது.

http://thamizhoviya.blogspot.com/2008/04/blog-post_08.html